
இன்று வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது பயந்து வெளியில் ஓடியவர்கள் தான் தமக்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் இனியும் ரணில் விக்கிரமசிங்க தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் அவசியமில்லையெனவும் தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
121 பேர் இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஆதரவாக வாக்களித்த போதிலும் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ரணிலை ஆதரிக்காது என மஹிந்த தரப்பு பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் ரணிலுக்கு 100 பேரே ஆதரவாக இருப்பதாகவும் பெரும்பான்மையில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறித்து வினவப்பட்ட போதே சஜித் இவ்வாறு பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment