நபிகளாரின் முன்மாதிரிகள் காலத்தின் கட்டாயம்: ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 November 2018

நபிகளாரின் முன்மாதிரிகள் காலத்தின் கட்டாயம்: ரணில்


பல கூறுகளாகப் பிரிந்து வாழும் இன்றைய உலக சமூகம் முஹம்மத் நபியவர்களின் வாழ்வியலிலிருந்து கற்றுக்கொள்ளவும் பயன்பெறவும் பல விடயங்கள் உள்ளதாகவும் அவை காலத்திற்கு அவசியமானவை எனவும் தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.


நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி எமது ஆட்சியமைப்புக்கும் பொதுச் சமூகத்திற்கும் மிகவும் அவசியமான ஒரு சந்தர்ப்பமாக இன்றைய சூழ்நிலை காணப்படுகிறது எனவும் தெரிவிக்கின்ற அவர், பல கூறுகளாகப் பிரிந்திருந்த அன்றைய மத்திய கிழக்கு மக்களை அண்ணலாரின் வழிமுறைககள் ஒன்றுபடுத்தியதாகவும் அது நம் தேசத்துக்கும் அவசியப்படுகிறது எனவும் தெரிவிக்கிறார்.

முஸ்லிம் சமூகத்துக்கான தனது மீலாத் செய்தியிலேயே இவ்வாறு ரணில் தெரிவித்துள்ள அதேவேளை, கடந்த மூன்றாண்டுகள் நல்லாட்சி நிலவியதாகவும் தெரிவிக்கின்றமையும் ரணில் - மைத்ரி கூட்டரசு காலத்தில் கிந்தொட்ட, அம்பாறை, திகன என பல முஸ்லிம் விரோத வன்முறைகள் இடம்பெற்றிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment