
மஹிந்த அணியை சில ஊடகங்கள் அரசாங்கமாக ஏற்று அங்கீகாரம் வழங்கியிருப்பது தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம், எஸ்.எம். மரிக்கார், ஹிருனிகா உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் சபாநாயகர் ஊடகங்களுக்கு அறிவித்தல் விடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது குறித்து பேசப்பட்ட அதேவேளை, கடந்த அமர்விலும் எஸ்.எம் மரிக்கார் இது தொடர்பில் கவலை வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்றம் மஹிந்த அணியை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ளாத நிலையில், தொடர்ந்தும் அவரைப் பிரதமராகவும் ஏனையோரை அமைச்சர்களாகவும் முக்கிய ஊடகங்கள் காட்சிப்படுத்துவதாக இங்கு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment