மைத்ரி தலைமைத்துவத்தை விட்டு விலக வேண்டும்: புத்ததாச - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 November 2018

மைத்ரி தலைமைத்துவத்தை விட்டு விலக வேண்டும்: புத்ததாச


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை விட்டு விலகி அதனை கட்சி மீது பற்றுக்கொண்ட ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கிறார் கடுவெல முன்னாள் நகரபிதா புத்ததாச.



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கவென புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள வன் ஸ்ரீலங்கா அமைப்பு சார்பாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் பலவீனப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதனைப் பாதுகாக்கும் கட்டாயத் தேவை உணரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

இவ்வமைப்பின் பின்னணியில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவே இருப்பதாக ஊகங்கள் வெளியிடப்பட்டு வரும் அதேவேளை மஹிந்த ராஜபக்ச பெரமுனவின் உறுப்பினராகியுள்ள நிலையில் அவரின் கீழ் அணி திரள்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து விடும் எனவும் புத்ததாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment