
இம்மாதம் 14 முதல் 23ம் திகதி வரையான எந்தவொரு நாடாளுமன்ற அமர்வும் அரசியலமைப்பின் சட்டங்களுக்குட்பட்டு நடைபெறவில்லையெனவும் அவற்றிற்கான ஹன்சார்ட் பதிவுகள் நீக்கப்பட வேண்டும் எனவும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர் மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
தினேஸ் குணவர்தன, எஸ்.பி திசாநாயக்க உட்பட மஹிந்த அணியைச் சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
குறித்த தினங்களுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் செல்லுபடியாகாது எனவும் அன்றைய நடவடிக்கைகள் தொடர்பான பதிவேடுகளை பிரசுரிக்கக் கூடாது எஎனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள அதேவேளை மைத்ரி நியமித்த மஹிந்த அரசு சட்டவிரோதமானது என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment