ஐக்கிய தேசியக் கட்சியுடன் 'பேச' மைத்ரியின் புதிய நிபந்தனை! - sonakar.com

Post Top Ad

Saturday, 17 November 2018

ஐக்கிய தேசியக் கட்சியுடன் 'பேச' மைத்ரியின் புதிய நிபந்தனை!


நாடாளுமன்றில் முறையாக செயற்பட்டு நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டாலன்றி ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் பேசத் தயாரில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.நேற்று முன் தினம் ஐக்கிய தேசியக் கட்சியினரை சந்தித்த ஜனாதிபதி, மறுதினம் நம்பிக்கையில்லா பிரேரணையை நடாத்துமாறு தெரிவித்திருந்தார். எனினும், அது முறைப்படி நடாத்தப்படவில்லையெனக் கூறி அதனையும் அவர் நிராகரித்துள்ள அதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னெடுக்கத் தேவையான 12 அம்ச செயற்பாட்டை வெளியிட்டுள்ளது மஹிந்த ராஜபகச்வின் அலுவலகம்.

இந்நிலையில், அனைத்தும் முறைப்படி நடந்தாலேயன்றி, தான் ஐக்கிய தேசியக் கட்சியினரை சந்திக்கப் போவதில்லையென மைத்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment