உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னரும் சர்ச்சை தொடரும் அறிகுறி! - sonakar.com

Post Top Ad

Friday 30 November 2018

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னரும் சர்ச்சை தொடரும் அறிகுறி!


நாடாளுமன்ற பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்சவால் நிரூபிக்க முடியாது எனும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற போதிலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாது எனும் மைத்ரியின் முடிவில் மாற்றமில்லையென அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் அணிக்கு அரசமைக்கும் அதிகாரத்தை தான் வழங்கத் தயார் என மைத்ரி தெரிவித்துள்ளார். இப்பின்னணியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னரும் சர்ச்சை தொடரும் அறிகுறியே காணப்படுகிறது.

நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் என தீர்ப்பளிக்கப்பட்டாலும், மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி மைத்ரி வேண்டக்கூடும் என்பதால் சபை அமர்வுகள் தொடர்ந்தும் சர்ச்சைக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவே தமது பிரதமர் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு ஆதரவளித்து எழுத்து மூலம் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும், டிசம்பர் 7ம் திகதிக்கு முன்பாக தற்போதைய பிரதமரை பதவி நீக்கும் எண்ணம் மைத்ரிக்கு இல்லையென அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment