சபையை விட்டு வெளியேறினார் சபாநாயகர்! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 November 2018

சபையை விட்டு வெளியேறினார் சபாநாயகர்!


மஹிந்த ராஜபக்சவின் உரையையடுத்து நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் பின்னணியில் சபையை விட்டு வெளியேறியுள்ளார் சபாநாயகர்.கூட்டு எதிர்க்கட்சியினர் சபாநாயகரின் ஆசனம் வரை சென்று கூச்சலில் ஈடுபட்ட நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் சபாநாயகர் கரு ஜயசூரியவை சுற்றி நின்று பாதுகாப்பளித்திருந்தனர்.

மஹிந்தவின் உரைக்கெதிராக அபிப்பிராயம் வெளியிட்ட லக்ஷ்மன் கிரியல்ல அவரது உரை மீது நம்பிக்கையில்லையெனவும் அதனடிப்படையில் வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் எனவும் கோரியிருந்தார். இது தொடர்பில் சபையின் இணக்கப்பாட்டை சபாநாயகர் கோரியிருந்த நிலையிலேயே அசாதாரண சூழ்நிலை தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment