ஒலி வாங்கியை இழுக்கச் சென்ற திலும் அமுனுகமவுக்கு காயம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 November 2018

ஒலி வாங்கியை இழுக்கச் சென்ற திலும் அமுனுகமவுக்கு காயம்!


சபாநாயகரின் ஒலி வாங்கியை (மைக்) இழுக்கச் சென்ற கூட்டு எதிர்க்கட்சி நா. உறுப்பினர் திலும் அமுனுகம தனது கையை காயப்படுத்திக் கொண்டு சபையை விட்டு வெளியேறியுள்ளார்.மஹிந்தவின் உரைக்கெதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு லக்ஷ்மன் கிரியல்ல கோரியிருந்ததன் பின்னணியில் சபையோரின் இணக்கப்பாட்டை சபாநாயகர் அறிய முற்பட்டிருந்தார். இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் சபாநாயகரின் ஆசனத்துக்கு அருகே சென்று அமளியில் ஏற்பட்டதனால் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment