
கட்சியின் தலைமைப் பதவியையோ, பிரதமர் பதவியையோ ஏற்பதில் தனக்கு எந்தத் தயக்கமுமில்லையென தெரிவிக்கின்ற சஜித் பிரேமதாச அப்பதவிகளை விலைக்கு வாங்க முடியாதெனவும் அவை தானாக, மக்கள் ஆசீர்வாதத்துடன் கிடைக்கப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.
நாடாளுமன்ற வளாகத்தில் சற்று முன்னர் இது பற்றி வினவப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்த அவர், இன்றைய போக்கில் இலங்கைக்கு நாடாளுமன்றம் ஒன்று அவசியமா? எனும் கேள்வியெழுந்துள்ளதாகவும், ஜனநாயகம் முழுமையாக சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வு பெரும்பாலும் அடுத்த வாரத்திற்கான ஒத்தி வைப்புடன் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment