
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சற்று முன்னர் ஆரம்பித்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டு, கலகக்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என லக்ஷமன் கிரியல்ல வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இன்று நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத தரப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பது தவறு என அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதி சபாநாயகர் சபை அமர்வை அடுத்த வெள்ளிக்கிழமை 23ம் திகதி வரை ஒத்தி வைத்து நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment