இரு பிரதமர்களின் பிரதிநிதிகள் மைத்ரியை சந்திக்க முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 November 2018

இரு பிரதமர்களின் பிரதிநிதிகள் மைத்ரியை சந்திக்க முஸ்தீபு!


நாடாளுமன்ற நடவடிக்கைகள் இரண்டாவது நாளாகவும் குழப்பப்பட்டுள்ள நிலையில் சபை அமர்வு நாளை மதியம் 1.30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இச் சூழ்நிலை தொடர்வதைத் தவிர்க்க இரு தரப்பும் உரிமை கோரும் இரு பிரதமர்களினதும் சார்பான பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து தீர்வொன்றைக் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மஹிந்த தரப்பில் சமல் ராஜபக்ச இதற்கான பொறுப்பையேற்றுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ராஜித மற்றும் சம்பிக்க ஆகியோர் முன் வந்துள்ளனர். எனினும் மைத்ரி இதற்கு ஒப்புக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment