
மைத்ரிபால சிறிசேன மஹிந்த தரப்புடன் இணைந்ததன் பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய மஹிந்த ஆதரவாளர்கள் சுதந்திரமாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளனர்.
இப்பின்னணியில், மஹிந்த இவ்விவகாரத்தில் வெற்றி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய கூட்டணி மூலம் மைத்ரிபால சிறிசேன வெகுவாக பழைய உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனால் மஹிந்த ராஜபக்ச தரப்பு அவதானமாக இருப்பதாகவும் பொதுஜன பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பளராக்குவது தொடர்பில் தொடர்ந்தும் இணக்கப்பாடில்லாத நிலையில் இரு தரப்பும் சந்தேகத்துடனேயே உறவைத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment