நாட்டு நடப்பு: சந்திரிக்காவுக்குக் கவலை! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 November 2018

நாட்டு நடப்பு: சந்திரிக்காவுக்குக் கவலை!


2015 ஜனவரி மாதம் 8ம் திகதி பெற்ற மக்கள் ஆணையை சில ஸ்ரீலசுக உறுப்பினர்கள் மிதித்து நாசமாக்குவதைக் கண்டு தான் கவலையுற்றுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.


சந்திரிக்காவின் தலையீட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டு ஸ்ரீலசுக செயலாளராக இருந்த மைத்ரிபால சிறிசேன பொது வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை திடீரென நீக்கி மஹிந்தவை பிரதமராக நியமித்து, மைத்ரிபால சிறிசேன அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையிலேயே சந்திரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment