புதிய அரசு குறுகிய காலத்தில் மண் கவ்வும்: சந்திரிக்கா! - sonakar.com

Post Top Ad

Sunday, 4 November 2018

புதிய அரசு குறுகிய காலத்தில் மண் கவ்வும்: சந்திரிக்கா!


மைத்ரி - மஹிந்த கூட்டணி விரைவில் மண்ணைக் கவ்வும் என தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.ரணிலை நீக்கி விட்டு, மஹிந்தவை பிரதமராக நியமித்தமை ஜனநாயக விரோதம் எனவும் இதற்கான விலையை மைத்ரி அனுபவிப்பார் எனவும் தெரிவிக்கின்ற அவர், புதிய அரசு விரைவில் மண்ணைக் கவ்வும் என தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கான பேரம் தொடர்கின்றமையும் முஸ்லிம் கட்சிகளுள் ஒன்று தீவிர பேரத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment