
புத்தளம் காஸிமிய்யா மத்ரசாவுக்கு 2019ம் புதிய கல்வி ஆண்டுக்கான ஹிப்ழ் ஷரீஆ பிரிவுகளுக்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் 2018/12/30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு காஸிமிய்யா மத்ரசாவில் நடைபெறவிருக்கிறது.
ஹிப்ழ் பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2019ம் ஆண்டு பாடசாலை கல்வியில் 6ம் தரத்தில் கற்கக் கூடியோராகவும் அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராகவும் இருத்தல் வேண்டும்.
ஷரிஆ (கிதாபு) பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2019ம் ஆண்டு பாடசாலை கல்வியில் 8ம் அல்லது 9ம் தரத்தில் கற்கக் கூடியோராகவும் அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராகவும் இருத்தல் வேண்டும்.
தெரிவு செய்யப்படும் மாணவர்கள் மேலதிகமாக:
- அல்ஆலிம்(முதவஸ்ஸிதா,ஸானவிய்யா)
- க.பொ.த (சாதாரண தரம், உயர் தரம்)
- அஹதிய்யா, தர்மசாரய
- ICT
மொழியறிவு (அரபு, ஆங்கிலம், சிங்களம்) மத்ரஸாவிலேயே கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றுவர். இங்கு கல்வியை பூர்த்தி செய்யும் மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள தகுதி பெறுவர்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் - மூலப்பிரதி
- பாடசாலையில் இறுதியாக சித்தி அடைந்த வகுப்பின் தேர்ச்சி அறிக்கை
- பாடசாலையினதும் மஹல்லா மஸ்ஜிதினதும் ஒழுக்க சான்றிதழ்
- வேறு திறமைச் சான்றிதழ்கள்
மேலதிக் விபரங்களுக்கு 032 22 65 738 , 0774257372 எனும் இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ளவும்.
அதிபர்
காஸிமிய்யா அரபுக்கல்லூரி
புத்தளம்.
No comments:
Post a Comment