பிரதமரை நியமிப்பது நாடாளுமன்றமேயன்றி மைத்ரியில்லை: ரணில் - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 November 2018

பிரதமரை நியமிப்பது நாடாளுமன்றமேயன்றி மைத்ரியில்லை: ரணில்


ஜனாதிபதி தனக்கு வேண்டியவரை பிரதமராக நியமிக்கும் காலம் மலையேறி விட்டதாக தெரிவிக்கும் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றம் தெரிவு செய்யும் ஒருவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.


19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக நாடாளுமன்றுக்கே அந்த அதிகாரம் இருப்பதாக களுத்துறையில் வைத்து நேற்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ள அதேவேளை ரணிலையோ, சரத் பொன்சேகாவையோ தன்னால் பிரதமராக நியமிக்க முடியாது எனவும் அவர்களோடு சேர்ந்தியங்க முடியாது எனவும் மைத்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக நாடாளுமன்றம் கலைக்கப்படவும் முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி வாதிட்டு வரும் நிலையில் டிசம்பர் 7ம் திகதி உச்ச நீதிமன்றில் இதற்கான தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் தற்சமயம் மஹிந்த தலைமையில் மைத்ரி அமைச்சரவையொன்றை நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment