இலங்கை நாணய பெறுமதி மேலும் சரிவு: இன்று ரூ.182! - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 November 2018

இலங்கை நாணய பெறுமதி மேலும் சரிவு: இன்று ரூ.182!


அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணய பெறுமதி இன்று மேலும் சரிவடைந்துள்ள நிலையில் விற்பனை விலை ரூ. 182.27ஐத் தொட்டுள்ளது.


இன்றைய கொள்வனவு விலை ரூ. 178.32 என பதிவாகின்ற அதேவேளை கடந்த வாரமே இலங்கையின் தரப்படுத்தலும் மூடிஸ் நிறுவனத்தினரால் குறைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சர்வதேச அளவில் பல நாடுகளின் நாணய பெறுமதி வீழ்ச்சி கண்டு வருவதாகவும் அமெரிக்க டொலரின் பெறுமானம் உயர்வதே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமையும் ரணில் - மைத்ரி கூட்டாட்சியில் மஹிந்த தரப்பு அரசின் மீதே பழி சுமத்தியிருந்ததோடு தான் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நாணய பெறுமதி உயரும் என மஹிந்த தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment