
ஜனாதிபதி ஒரு புறம், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற பெரும்பான்மை இன்னொரு புறம், மஹிந்த அணி மறு புறம் என அரச இயந்திரம் முடங்கிப் போயுள்ள நிலை தொடருமானால் நாடு சீரழிந்து விடும் என கவலை வெளியிட்டுள்ளார் குமார வெல்கம.
தன்னைப் பொறுத்தவரையில் நாடாளுமன்ற பெரும்பான்மை உள்ள தரப்பு ஆட்சியை முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடெனவும் இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் கூட தான் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கும் வெல்கம, கோத்தபாய கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பளாராக்கப்படுவதையும் எதிர்த்து வந்தவராவார்.
இந்நிலையில், ஜனாதிபதி தான் ஒரு பக்கமாக நின்று செயலிழந்து வருவதாகவும் நிலைமை தொடருமானால் நாடு ஸ்தீரத்தன்மையிழந்து சீரழியும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment