
கடந்த மூன்று வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசின் கீழ் இடம்பெற்ற பாரிய ஊழல்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அவை ஆராயப்படும் போது மத்திய வங்கி ஊழல்களை விட மிக மோசமான ஊழல்கள் அம்பலமாகும் எனவும் தெரிவிக்கின்ற மைத்ரி இனிமேல் எக்காரணங்கொண்டும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்ட - ஒழுங்கு, நீதித்துறை மற்றும் பொலிஸ் பொறுப்பினை வைத்துக் கொண்டு மஹிந்த அரசின் ஊழல்களை விசாரிக்காமல் விட்டதற்கும் ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும் எனவும் மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment