
2009ல் போன்று நாட்டு மக்கள் தன் கரங்களைப் பலப்படுத்தினால் நாட்டை மீண்டும் சீரான அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்கிறார் மஹிந்த ராஜபக்ச.
நாட்டு மக்களுக்கு அவர் இன்று விடுத்துள்ள விசேட செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கின்ற அவர், தம்மைத் தவிர வேறு யாராலும் நாட்டை மீண்டும் சீரான பாதையில் இட்டுச் செல்ல முடியாது எனவும் 2005ல் இதை விட மோசமான நிலையிலேயே தான் பொறுப்பேற்றிருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, ஓரிரு மாதங்களுக்குள் பாரிய சாதனைகள் எதையும் செய்து விட முடியாது எனவும் பொதுத் தேர்தலே ஒரே வழியெனவும் தெரிவிக்கின்ற அவர் மக்களைத் தம்மோடு அணி திரளுமாறு கேட்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment