
மைத்ரிபால சிறிசேனவின் நடவடிக்கையை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினரும், கரு ஜயசூரியவின் நடவடிக்கைகளை விமர்சித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரும் கருத்து வெளியிட்டு பலபிட்டிய பிரதேச சபைக் கூட்டத்தில் அமளியை ஏற்படுத்திய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியனர் தெரிவித்திருந்த நிலையில் கரு ஜயசூரிய நாடாளுமன்ற சம்பிரதாயங்களை குழி தோண்டிப் புதைப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் தெரிவித்து இரு தரப்பும் தர்க்கத்திலும் தள்ளுமுள்ளிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment