
உலகமே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த நிலையில் நாடாளுமன்றில் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது.. எனினும், அதற்கான ஆதாரம் எங்கே என கேள்வியெழுப்பியிருந்த ஜனாதிபதி அது தொடர்பில் நாடாளுமன்ற பதிவுப் புத்தகத்தில் தகவல் இல்லையென தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹன்சார்டில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதற்கான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் கரு ஜயசூரிய பிரதம நீதியரசரிடம் அபிப்பிராயம் கோரியதாக இன்றைய தினம் உலா வரும் தகவலை மறுத்து விளக்கமளித்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவரது அலுவலகம், சட்டம் தெளிவாக இருப்பதாகவும் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதில் எந்த சந்தேகமுமில்லையெனவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment