மஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா - sonakar.com

Post Top Ad

Friday, 30 November 2018

மஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா


மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள மட்/மம/முஹைதீன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா மிக நீண்ட காலத்தின் பின்னராக வித்தியாலயத்தின் அதிபர் A.A.அஸீஸ் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(30) பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.இந்த விழாவில் காத்தான்குடி பிரதேசக்கல்விப்பணிப்பாளர் M.A.C.M.பதுர்தீன்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் I.M.இப்ராஹீம்,ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் M.L.அலாவுதீன் உற்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.


இதன் போது தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுகொண்ட மாணவர்கள் இருவர் விசேடமாக பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை ரீதியாக பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்த மாணவர்களுக்கும்,மூன்றாம் தவணைப்பரீட்சைகளில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கும் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாடசாலையில் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறானதொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதனை ஏற்பாடு செய்த பாடசாலையின் அதிபர் உற்பட ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக இதன்போது பெற்றார்கள் தெரிவித்தனர்.

-ஆதிப் அஹமட்

No comments:

Post a comment