
மஹிந்த ராஜபக்ச தனக்கான பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில் இரு முஸ்லிம் கட்சிகளும் பய பக்தியுடன் மக்கா சென்று அதிர்வலையை ஏற்படுத்தியதுடன் ஒன்றிணைந்து புகைப்படங்களுக்கு காட்சியளித்து மகிழ்ந்திருந்தனர்.
இப்பின்னணியில் இரு கட்சிகளும் ஒன்றிணையக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக எதிர்பார்ப்பும் உருவாக்கியிருந்த நிலையில், மு.கா தனித்துப் போட்டியிட்டு அதன் பின் அரசுக்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கும் என விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார் ரவுப் ஹக்கீம்.
ரிசாட் பதியுதீன் அணி நாளையே நாடு திரும்பவுள்ள நிலையில், பைசல் காசிம் மீண்டும் இன்றிரவு கட்டார் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment