கல்முனை: 'சிப்தொர' புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Friday, 30 November 2018

கல்முனை: 'சிப்தொர' புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு



கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்று சமுர்த்தி உத்தியோகத்தர்களை கெளரவிப்பு, பாடசாலை மாணவர்களுக்கான 'சிப்தொர' புலமை பரிசில் வழங்குதல் போன்ற  நிகழ்வு   (28)  கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில்  இடம்பெற்றது.  

இதில் கல்முனை பிரதேசத்தில் சிறப்பாக சேவையாற்றிவரும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கெளரவித்தல் ,  க.போ.த. உயர் தரம் கற்கும் சமுர்த்தி உதவி பெரும் மாணவர்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 18பேர்களுக்கு 2வருடத்துக்கான புலமை பரிசில் வழங்கிவைத்தல்,  பிரதேச மட்ட சிறுவர் கலாசார போட்டியில்  வெற்றிஈட்டிய மாணவர்களை சான்றிதழ் வழங்குதல், சமுர்த்தி மாவட்ட பணிப்பாளரின் சேவையை பாராட்டி கெளரவித்தல்  போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.


சமுர்த்தி தலைமைப்பீட  முகாமையாளர்  ஏ.சி.எ.நஜீமின் ஒருங்கிணைப்பில்,  கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்  தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் அதிதியாக சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர்  எம்.எஸ்.எம்.சப்ராஸ் கலந்து கொண்டதுடன்,  திட்ட முகாமையாளர் எ.எம்.எஸ்.நயீமா, முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.றிபாய் சமுர்த்தி வங்கி-வலய முகமையாளர்களான  எம்.எம்.எம்.முபீன், மோசஸ் புவிராஜ் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,எம்.என்.எம்.அப்ராஸ்


No comments:

Post a Comment