காட் போர்ட் அமைச்சரவைக்கு எந்த அதிகாரமும் இல்லை: ரணில்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

காட் போர்ட் அமைச்சரவைக்கு எந்த அதிகாரமும் இல்லை: ரணில்!


நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் சட்டவிரோத பிரதமர் நியமனம் மற்றும் அமைச்சரவை நியமனம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, காட் போர்ட் அமைச்சரவைக்கு எந்த அதிகாரமும் இல்லையென தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய நிலையில் சட்டவிரோத அரசு பதவியிழந்துள்ளதாகவும் முன்னைய அரசு அதிகாரத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், சபாநாயகர் முறைப்படி வாக்கெடுப்பை நடாத்த முனைந்ததாகவும் அதனைத் தடுக்க முனைந்த நிலையிலேயே வாய் மூல வாக்கெடுப்பின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ரணில் மேலும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, தமது தரப்பு 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமடங்கிய கடிதத்தை எழுத்து மூலம் வழங்கி தமது பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகவும் அதனை முடிந்தால் நாளை முறியடிக்க முயற்சிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment