
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், குப்பைக்கு எதிராக 56 நாட்களைக் கடந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை(23) பிற்பகல் யாழ். நகரிலுள்ள பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஆகியன இணைந்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தினர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சி.கா. செந்திவேல், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச.தனுஜன், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், தூய்மைக்கான புத்தளம் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், யாழ். கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன பிரதிநிதிகள், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தித் தமிழ், சிங்கள மொழிகளில் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் சுலோகங்களையும் தாங்கி கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
-பாறுக் ஷிஹான்
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment