மருதமுனை: புற்றுறோய் அறிவூட்டல் நிகழ்ச்சி - sonakar.com

Post Top Ad

Monday, 5 November 2018

மருதமுனை: புற்றுறோய் அறிவூட்டல் நிகழ்ச்சி

w


அண்மைக்காலமாக தொற்றா நோய்களுள் மிகவும் பாரதூரமான புற்றுநோய் (Cancer) எமது கிராமத்தில் பலரின் உயிர்களை காவு கொண்டதுடன் மேலும் பலர் நோய் நிருணயம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். GLOBCAN (சர்வதேச புற்றுநோய் ஆய்வு நிலையம்) ஆய்வின்படி 2030ம் ஆண்டளவில் வருடந்தோறும் 5.5 மில்லியன் பேர் புற்றுநோயால் ,இறப்பார்கள் எனவும்,இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்திருக்கின்றது.
தற்போதய எமது வாழ்க்கை முறை, எமது உணவுப் பழக்க வழக்கங்கள், சூழல் காரணிகள், உடலியற்காரணிகள் மற்றும் பரம்பரை காரணிகள் இந்நோய்க்கான காரணிகள் என இனங்காணப்பட்டுள்ளன. எமது நாட்டில் நுரையீரல் புற்றுநோய், மூளைப்புற்று நோய், மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப்புற்றுநோய் என்பவற்றால் வருடந்தோறும் அதிக எண்ணிக்கையானோர் பாதிப்படைவதாக இலங்கை புற்றுநோய் பதிவகம் (Sri Lanka Cancer Registry) தெரிவிக்கின்றது.
புற்றுநோயைத் தடுப்பதற்கும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச நிறுவனங்களும், சுகாதார நிறுவனங்களும், வைத்தியசாலைகளும் பல முன்னெடுப்புக்களை செய்துவரும் இத்தருணத்தில். மருதமுனையிலும் புற்றுநோய் அறிவூட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2018 நவம்பர் 06ம் திகதி செவ்வாய் கிழமை
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆப் பள்ளிவாசல்
காலை 9.30 - 11.30 (பெண்களுக்கு)

மருதமுனை மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆப்பள்ளிவாசல்
மாலை 3.30 - 5.30 (பெண்களுக்கு)

மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசல்
மாலை 7.30 - 9.30 (ஆண்களுக்கு)

வளவாளர் : டாக்டர் யு. இக்பால் MBBS,MD,RCP (UK)
புற்றுநோய் விஷேட வைத்திய நிபுணர்,
புற்றுநோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

எனவே, மேற்படி நகழ்ச்சிகளில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண், பெண் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பிரசுர அனுசரணை : SESEF (கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையம்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பீச் மஜ்லிஸ், மருதமுனை

-M.I.M.Valleeth

No comments:

Post a Comment