
அப்பத்துண்டுக்காகவோ, கரட் துண்டுக்காகவோ கட்சி மாறி துரோகம் செய்யும் அளவுக்கு சஜித் பிரேமதாச இல்லையெனவும் ஒரு போது கட்சிக்கும் தலைமைக்கும் துரோகமிழைக்க மாட்டார் எனவும் தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.
ரணிலுக்கு மாற்றீடாக சஜித் பிரேமதாசவின் பெயர் குறிப்பிடப்படுவதில் ஆச்சரியப்படுவதறகு எதுவுமில்லையெனவும் இங்கிலாந்து பிரதமருக்கு எதிராக அவரது அமைச்சரவையிலேயே மாற்றுத் தெரிவு முன் மொழியப்படுகிறது எனவும் தெரிவிக்கின்ற அவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுதியான கட்சியெனவும் சஜித்துக்கு கிடைக்க வேண்டிய கௌரவம் காலப் போக்கில் அவரை வந்தடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே அப்பம் தின்று கட்சி தாவும் நிலைக்கு சஜித் போக வேண்டிய அவசியமில்லையென மங்கள இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment