இழப்பதற்கு இரண்டு விடயங்களே எஞ்சியிருக்கின்றன: மைத்ரி குமுறல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 24 November 2018

இழப்பதற்கு இரண்டு விடயங்களே எஞ்சியிருக்கின்றன: மைத்ரி குமுறல்!


தனது வாழ்வில் தான் இனி இழப்பதற்கு இரண்டு விடயங்களே எஞ்சியிருப்பதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



முதலாவது, தனது ஜனாதிபதி பதவி அடுத்தது தனது உயிர் எனவும் இதில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ தான் விரைவில் இழக்கக் கூடும் எனவும் ஆனாலும் அதற்குத் தயாராகவே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி - நாடாளுமன்றைக் கலைக்க முற்பட்டமையில் தவறில்லையெனவே தொடர்ந்தும் தெரிவிக்கின்ற அவர், தனது புதல்வி எழுதிய ஜனாதிபதி தாத்தா எனும் புத்தகம் பாரிய விமர்சனத்துக்குள்ளாகி வருவதாகவும் ஜனவரியில் ரணிலுடன் முறிவுற்ற அரசியல் திருமணம் எனும் பெயரில் தானே ஒரு நூல் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment