ரணிலை பிரதமராக அறிவிக்கத் தயக்கம்: இழுத்தடிக்கும் மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Friday 16 November 2018

ரணிலை பிரதமராக அறிவிக்கத் தயக்கம்: இழுத்தடிக்கும் மைத்ரி!


நாடாளுமன்ற பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட போதிலும் ஒக்டோபர் 26ம் திகதி தன்னுடைய செயலே சரியென வாதிட்டு வரும் மைத்ரி, அன்றைய தினம் வரை இருந்த அரசை மீள அனுமதிப்பதில் தயக்கம் காட்டி வருகிறார்.


இந்நிலையில், நேற்றைய தினம் அவரது அறிவுரைக்கேற்ப ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபங்கள் தொடர்பிலான வாசகங்கள் நீக்கப்பட்டு இன்று பாரிய களேபரத்தின் மத்தியில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள மைத்ரி தயக்கம் காட்டி வருவதாக அறியமுடிகிறது.

தனது செயற்பாடு சட்டரீதியானது எனவும் அரசியல் சட்டத்துக்கமைவானது எனவும் தொடர்ந்தும் வாதிட்டு வரும் மைத்ரி, ஒக்டோபர் 26ம் நாள் ரணிலை நீக்கியமை எந்த நியாயத்தின் அடிப்படையில் என தெரிவிக்காத நிலையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ரணிலை மீளவும் பிரதமராக்குவதில் முனைப்பாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment