மைத்ரி சட்ட விதிகளை மீறி விட்டார்: உச்ச நீதிமன்றில் வாதம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 November 2018

மைத்ரி சட்ட விதிகளை மீறி விட்டார்: உச்ச நீதிமன்றில் வாதம்!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரசியல் சட்ட விதிகளை மீறி, எதோச்சாதிகாரமாக நடந்து கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.அரசியல் சட்டத்தின் 33 (2) 'சி' சரத்தின அடிப்படையில் நாடாளுமன்றைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம், வரையறைக்குட்பட்டது மாத்திரமன்றி ஏனைய செயற்பாட்டு விதிமுறைகளுக்கும் உட்பட்டது எனவும் அரசியல் சட்டத்தின் 70 (1)ம் சரத்து இதன் மூலம் தெளிவாக மீறப்பட்டுள்ளதாகவும் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு 33 (2)ம் சரத்தினை தனித்துபயோகிக்க முடியுமானால் கால வரையறையின்றி நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்கவும் அதிகாரம் உள்ளதாகவே கருதப்படும் எனவும் ஆயினும் அவ்வாறான அதிகாரம் இல்லையென்பதே குறித்த சரத்து வரையறைக்குட்பட்டது என்பதை தெளிவாக்குவதாகவும் வாதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment