
45 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், 17 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் மற்றும் எட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மறறும் ஒரு ஜே.வி.பி உறுப்பினர் உட்பட 71 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்யாத நிலையில் குறித்த நபர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்கப்போவதில்லையென்பதோடு பல இளைய தலைமுறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் உத்தரவின் பின்னணியில் நாடாளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளதனால் குறித்த உறுப்பினர்கள் தமது ஐந்து வருட காலத்தை நிறைவு செய்ய முடியாது போயுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment