தொடரும் காத்திருப்பு: 5 மணியளவில் தீர்ப்பு? - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 November 2018

தொடரும் காத்திருப்பு: 5 மணியளவில் தீர்ப்பு?


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றைக் கலைத்தமை சட்டவிரோதம் எனக் கூறி சுமார் 13 அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்ட மா அதிபர் தனது தரப்பு விளக்கத்தை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று ஐந்து மணியளவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பினை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் எனும் அடிப்படையில் இடைக்கால தடையுத்தரவை நாடியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் ஏலவே அறிவிக்கப்பட்டதற்கிணங்க நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment