சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க 'பெல் 505' ஹெலிகொப்டர் அறிமுகம் - sonakar.com

Post Top Ad

Saturday 17 November 2018

சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க 'பெல் 505' ஹெலிகொப்டர் அறிமுகம்

உலகப் புகழ் பெற்ற 'பெல் 505 ஹெலிகொப்டர்' நிறுவனம் இலங்கையில் அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. 
இது தொடர்பான வெள்ளோட்டம் கடந்த புதன்கிழமை வெலிசரையிலிருந்து ஆரம்பமாகியது. கைத்தொழில் சுற்றுலா வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ. எம். ஜௌபரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஐ.டவ்ளியூ.எஸ். நிறுவனத்தின் தலைவர் ஆர்தர் சேனாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 


இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் அம்பாறை போன்று பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அல்லது உள்ளுர் பயணிகளை 1200 அமெரிக்க டொலர்களை செலுத்தி ஆகாய மார்க்கமாக அழைத்துச் செல்வதற்காக ஐ.டவ்ளியூ.எஸ். கம்பனி ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளதான அதன் தலைவர் ஆர்தர் சேனாநாயக்க இங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.
கனடாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மூன்று ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் 50 பேர் பயணிக்கக்கூடிய எயார் பஸ் ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகல ஊடகவியலாளர்களும் ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு, கம்பஹா போன்ற பிரதேசங்களுக்கு ஆகாயத்தில் பறந்து சுற்றிக் காண்பிக்கப்பட்டது. ஒரு மணித்தயால பயணத்திற்கு ஒரு வழிப் பிரயாணத்திற்கு ஆயிரத்து 200 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக அறவிடப்படும்.
-Mohamed

No comments:

Post a Comment