இலங்கைத் திருநாட்டில் ஜனநாயக குழப்பம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 17 November 2018

இலங்கைத் திருநாட்டில் ஜனநாயக குழப்பம்!


கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தொடங்கிய அரசியல்  நெருக்கடி பல்வேறு கட்டங்களாக விஸ்பரூபமெடுத்து ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பாராளுமன்றத்தின் கௌரவத்தை அசிங்கப்படுத்திருப்பதானது ஜனநாயகத்தை நேசிக்கின்றவர்களையும், இந்நாட்டு மக்களில் நடுநிலைப் போக்குடையவர்களையும், கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் உருவான அரசியல் நெருக்கடியின் நிமித்தம்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்து கடந்த 9ஆம் திகதி வெளியிட்ட அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலைச் செயற்படுத்துவதற்கு உயர் நீதி மன்றம் சென்ற 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. உயர் நீதி மன்றத்தினால் இடைக்கால தடை விதித்திருந்த நிலையில் பாராளுமன்ற அமர்வை கூட்டுவது தொடர்பாக ஜனாதிபதியனால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கடந்த புதன்கிழமை 14ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியது. 

இதன்போது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவைக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த  நம்பிக்கையில்லாப் பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும். அவரது அமைச்சரவையும் பெரும்பான்மையை இழந்து விட்டதாக சபாநாயகர் அறிவித்ததையடுத்து கூச்சல் குழப்பங்களினால் பாராளுமன்றம் 15ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் 15ஆம் திகதி கூட்டப்பட்டு சபை நடவடிக்கைகளில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை கூக்குரல்களாலும், ஏச்சுப்பேச்சுக்களாலும், மோதல்களாலும் பாராளுமன்றத்தை அதிரவைத்த காணொளிகள் முழு உலகையே வியப்பில் ஆழ்த்தியிருப்பதுடன் இது நாட்டின் அதிகௌரத்துக்குரிய இடமாகக் கருதப்படும் பாராளுமன்றத்தின் ஜனநாயகத்திற்கு இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ள கௌரவத்தையும் வெளிச்சம் போட்டிருக்கிறது.

பாராளுமன்றத்தின் அதிக கௌவரப் பதவிக்குரிய சபாநாயகரின் ஆசனத்தின் மீது தண்ணீரை ஊற்றிக் கேவலப்படுத்தியதுடன், சபாநாயகரின் ஆவணங்களை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கசக்கியெடுத்ததையும் அவதானிக்க முடிந்தது. அத்துடன், அவரது ஒலிவாங்கியை தேசப்படுத்த முயற்சியெடுக்கப்பட்டது மாத்திரமின்றி, அவரது ஆசனத்தை நோக்கி குப்பைக் கூடைகளை வீசியெறிந்ததையும், பாராளுமன்ற உறுப்பினொருவர் கைத்தியுடன் காணப்பட்டதுவும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் கௌரவத்தையும், கலாசாரத்தையும் சவாலுக்குட்படுத்தியிருப்பதாகவே உணர முடிகிறது. 

பாராளுமன்றத்தின் கௌரவம்

ஒரு தேசத்தின் ஜனநாயகம் நீதித்துறை, சட்டவாகத்துறை, நிர்வாகத்துறை மற்றும் சுயாதீன ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தூண்களில் ஏதாவதொரு தூண் நலிவடையுமாயின் அத்தேசத்தின் ஜனநாயகம் ஆபத்தை எதிர்நோக்குமென ஆய்வாளாகள் சுட்டிக்காட்டுகின்றனர். சட்டம் நிறைவேற்றப்படுகின்ற பாராளுமன்றத்தினுள் சில  பாராளுமன்ற உறுப்பினர்கள் அவகௌரவமாக நடந்துகொண்டமையினூடாக பாராளுமன்றத்தி;ன் கௌரவம் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.

இவ்வாறு பாராளுமன்றம் கேள்விக்குட்படுத்தப்பட்ட சம்பவங்கள் கடந்த ஆட்சிக் காலங்களிலும் இடம்பெற்றிருந்தாலும் கடந்த 15ஆம் திகதி மக்கள் பிரதிநிதிகள் சிலர் நடந்து கொண்டமையைப் போன்றதொரு நிலைமையை கடந்த கால பாராளுமன்ற அவமதிப்புச் சம்பவங்களில் காணக் கூடியதாக இருக்கவில்லையென்றே கூறப்படுகிறது.

 ஒக்டோபர் 26ஆம் திகதி உருவான அரசியல் நெருக்கடியானது பிரலயமாக மாறியுள்ள நிலையில,; தொடரும் இந்த அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டு  ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன்; பாராளுமன்றத்தின் சுயாதீனமும,; கௌரவமும் பேணப்பட்டு ஜனநாயகம் பாராளுமன்றத்த்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியப்படுத்தப்பட வேண்டுமென்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்போரின் கோரிக்கையாக உள்ளதை இங்கு பதிவிட வேண்யுள்ளது. 

கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பங்களைத் தொடர்ந்து அன்று மாலை ஜனாதிபதிக்கும் சபாநாயகர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினைப் பிரதிநிதித்துப்படுத்தும் கட்சித்தலைமைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற அவசர சந்திப்பின்போது, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைப் பாராளுமன்றத்தில் புதிதாகச் சமர்ப்பித்து அதனை ஒழங்குப் பத்திரத்தில் சேர்த்து  சபையில் விவாதிக்க தினம் ஒதுக்க வேண்டிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பது கேள்விக்குட்படுத்தப்பட்டுளள ஜனநாகயத்தையும், பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் பாதுகாக்க ஜனாதிபதி முன்வைத்த முதல்படியென அரசியல்பரப்பில் பேசப்படுகிறது. 

அத்துடன், ஜனநாயகத்தையும் நிலையில் கட்டளையையும் மதித்து நடக்க வேண்டுமென அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அறிப்பானது ஜனாதிபதியின் ஜனநாயகம் தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவதாக அரசியல் அரங்கில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வெள்ளிக்கிழமை மீண்டும்  வாக்கெடுப்பு நடத்தப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனராத்தின தெரிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இக்கட்டுரை எழுதி முடிப்பதற்குள் எத்தகைய மாற்றங்கள், அரசியல் அரங்கில் ஏற்படும் என்று எதிர்வு கூற முடியாத நிலையே காணப்படுகிறது.

ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்க முறையாகும். இது இறைமை அதிகாரத்தினை மக்கள் தமக்கிடையில் பகிர்ந்து கொள்கின்ற உரிமைகளை வழங்குகின்ற ஒன்றாகும். இதனடிப்படையில் அரச அதிகாரத்தின் இறுதிப் பொறுப்பு மக்களிடமேயுள்ளது. இயற்கையாக மக்களின் நேரடி பங்குபற்றலினால் அல்லது அவர்களின் பிரதிநிதிகளினூடாக உருவாக்கப்படுகின்ற அரசாங்கம் என்பதாகும். 

இவ்வாறு அரசாங்கத்தை உருவாக்குகின்ற மக்கள் பிரதிநிதிகளில் சிலர் ஜனநாயகத்தின் பண்புகளை மறந்து செயற்பட்டு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும், மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள நல்லெண்ணத்தையும் சவாலுக்குட்படுத்தும் வகையில் செயற்படுதன் ஊடாக மக்கள் மாற்று வழிகளை தேர்தல்களில் கையாள முயற்சி;ப்பார்கள் என்பதை மறுதலிக்க முடியாது. 

ஜனநாயகத்தின் பண்புகள்

ஜனநாயகம்  சிறப்பாக இயங்க வேண்டுமாயின் சில அடிப்படை அம்சங்கள் காணப்பட வேண்டும் என்பதோடு ஜனநாயகத்தின் பண்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதும் அவசியமாகும். ஏனெனில், சமத்துவமும் சுதந்திரமும் ஜனநாயகத்தின் இரு பிரதான அடிப்படைப் பண்புகளாகும். ஜனநாயகப் பண்புகளின் பிரகாரம் சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்களாகும். ஜனநாயக அரசாங்கமொன்று சமூக, பொருளாதார,அரசியல் வாய்ப்புக்களை எல்லோருக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

சுதந்திரம் என்பது ஒரு மனிதன் தனது சுய முன்னேற்றத்திற்கு அவசியமானது எனக் கருதும் எல்லாவற்றையும் சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களுக்கும் எவ்வித பாதிப்புமின்றி செய்வற்குள்ள உரிமையாகும். இச்சுதந்திரம் ஒவ்வொரு பிரஜைக்கும் கிடைப்பதை ஜனநாயகம் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இந்த சுதந்திரம் முழுமையாக சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்படாததனாலேயே இந்நாடு பல்வேறு சமூக மற்றும் இனரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கியது என்பதை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

ஜனநாயகம் சகிப்புத் தன்மையினை முன்னுரிமைப்படுத்துகிறது. சகிப்புத்தன்மையில்லாவிட்டால் ஜனநாயகம் என்பது வெற்றி பெறாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடத்தில் இந்த ஜனநாயகப்பண்பு  மறந்து போனதனாலேயே பாராளுமன்றம் கலேபரமானது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் கௌரவம் கேலிக்கூத்தானது. மேலும் சுதந்திர சமூக முறைமையும் ஜனநாயகத்தின் பண்பாகும். இப்பண்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றோடு சுதந்திரமான சமூகத்தில் ஒவ்வொருவரினதும் சம்மதத்தின அடிப்படையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தீர்மானங்களும் நீPண்ட விவதாங்களின் பின்னரே எடுக்கப்படுதல் அவசியமாகும். நிர்வாகம் என்பது உண்மையான மக்கள் அபிப்பிராயத்தினை வெளிப்படுத்துகின்றதாக இருக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது.

ஜனநாயகம் சிறப்பாக இயங்க வேண்டுமானால் ஒவ்வொரு பிரச்சினை தொடர்பாகவும் முடிவு எடுப்பதற்கு முன்னர் நீண்ட விவாதங்கள் நடைபெற வேண்டும். எடுக்கப்படுகின்றன தீர்மானங்கள் எல்லோருடைய ஆதரவுடனும் ஏகமனதாக எடுக்கப்படுமாயின் அது மிகவும் சிறப்பானதாக அமையும் அல்லது பெரும்பான்மையோர் ஆதரவுடன் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு நாட்டின் ஜனநாயகம் பாதுகாப்படுவதோடு அதனூடாக மக்களின் சுதந்திரமும் உரிமையும் நலன்களும் பேணப்படுமென்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஜனநாயகம் என்பது இறுதியான அதிகாரங்களை மக்களிடமே கொண்டுள்ளது. ஜனநாயகத்தில் குறிப்பிட்ட வர்க்கமோ, வர்க்கங்களோ முதன்மையானதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், இந்நாட்டில் பெரும்பான்மை சமூகம் முதன்மைப்படுத்தப்பட்டு சிறுபான்மையினர் இரண்டாம் தரப்பிரஜைகளாக கருதப்படும் நிலை இந்நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கங்களினால் தோற்றிவிக்கப்பட்டமையே தொடரும் இனப்பிரச்சிiனைக்கான முதன்மைக் காரணிகளாகும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். 

ஜனநாயகத்தில் மக்களிடமே இறுதி அதிகாரம் காணப்படுவதனால் அவர்கள் அரசாங்கத்தினை மாற்றியமைக்கும் சக்தியைக் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். இந்தப் ஜனநாயப்பண்புதான் கடந்த 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் தற்போது பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் ஒன்றை நடாத்தி மக்களி;டம் அராங்கத்தை அமைக்கும் பொறுப்பை கையளிக்க எடுக்கும் முயற்சிகளாகவுமுள்ளது. இருந்தும் இந்த முயற்சி அரசியலமைப்புக்கு முரணானது என்பதை நீதி மன்றத்தின் கடந்த 13ஆம் திகதிய தீர்ப்பு வெளிப்படுத்தியிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக அரசாங்கம் மாற்றப்படுகின்ற போது ஜனநாயகத்தின் தூண்கள் பாதுகாப்படுவதும் அவசியமாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

ஜனநாயகத்தின் தூண்கள்

சட்டவாக்கத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் சுயாதீன ஊடகத்துறை ஆகியவையே ஜனநாயகத்தை தாங்கிக் கொண்டிருக்கும் தூண்களாகும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இத்தூண்கள் பெரும் சவால்களுக்கு உட்படுத்தப்பட்டிருப்பை உலக நாடுகள் பலவற்றில் காண முடிகிறது. 

இருப்பினும,; இலங்கையில் நீதித்துறை இன்னும் அதன் சுயாதீனத்தை இழக்க வில்லை என்பதை கடந்த 13ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புடம்போட்டிருக்கிறது என்பது வெளிப்படை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 8வது பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்றும் 19வது திருத்தச்சட்டத்தின்படி அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென்றும் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள்,சிவில் அமைப்புக்கள் உள்ளிட்டவர்களினால் 17 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் கடந்த திங்கள் கிழமை உயர் நீதி மன்றத்தில் தாக்கச் செய்யப்பட்;டது. 

இம்மனுக்கள் மீதான விசாரணைகள் இரு நாட்கள் முன்னெடுக்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதிரசர்கள் மூவர் கொண்ட குழுவினால் பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு தடைக்கால உத்தரவு வழங்கப்பட்டமையானது ஜனநாயகத்தின் தூணான நீதித்துறை உறுதியுடன் உள்ளதாகவே தீர்ப்புத் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்தக்கள் மூலம் அறியக் கூடியதாகவிருந்தது. 

அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும், பாராளுமன்ற சம்பிரதாயங்களையும், மீறி சிலர் சர்வாதிகார போக்கில் செயற்பட முயற்சித்தபோதிலும் இறுதியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது என தீர்ப்புத் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் வரலாற்றில் நாட்டின் அரசியலமைப்பு அமைய ஜனநாயகம் வெற்றிபெற்ற நாளாக நவம்பர் 14ஆம்திகதியைக் கருத வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரமேதாச குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பாராளுமன்றக் கலைப்பு அரசியலமைப்புக்கு ஏற்றது என சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்தவர்கள் தெரிவித்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் சட்டவாக்கத்தை நிறைவேற்றுகின்ற பாராளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகளும் நிர்வாகக்துறையை இயக்குகின்றவர்களும், ஊடகத்துறையினரும் ; ஜனநாயத்தைப் பாதுகாப்பதற்கும் நாட்டின் கௌரவத்திற்கும், மதிப்பிற்கும் கலங்கம் ஏற்படாமல் இருப்பதற்குமான அ;ர்பணிப்புக்களைச் செய்கின்றனர்களா என்பது இன்னும் கேள்விக்குரியதாகவே உள்ளன.

ஏனெனில், கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் மக்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்குச் சென்றவர்கள் சிலர் நடந்து கொண்ட விதம் வாக்களித்த மக்களுக்கெ தலைக்குணிவை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது. நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்துவிட்டது என இலங்கை வர்த்தக சம்மேளனம்  தெரிவித்துள்ளது.

இத்துடன் இற்றைய நிகழ்வு குறித்து முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா பண்டாரநாயக்க குமாதுரங்க தனது பக்கக்கருத்தையும்  தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்;பவங்கள் குறித்த தனது அறிக்கையில் ஜனநாயகம் காட்டிக்கொடு;க்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலமையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிக்கையொன்றினூhக வெளிப்படுத்தியிருக்கிறார். இச்சந்தர்;ப்பத்தில் வியாழக்கிழமை இலங்கையின் ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள் என ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பராளுமன்றத்தில் சில மக்கள் பிரதிநிதிகள் நடந்து கொண்ட விதம் பாராளுமன்ற ஜனாநாயகம் மற்றும் காலாசாரத்தைப் மதிக்காது செயற்பட்டiமானது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும், நாட்டு மக்களையும் விமர்சனம் செய்வதற்கும் விசனங்களை முன்வைப்பதற்கும் வழி வகுத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

 இந்நிலையில், ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்பட்டாலும் சில ஊடகங்கள் பக்கச்சார்பாக கருத்தக்களை வெளியிடுவதானது ஊடகத்துறையில் சுயாதீனத்தையம், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அவற்றின் வகிபங்கின் எதிர்பார்ப்பையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

 ஜனநாகயகம் என்பதே மக்களுக்கானது. ஜனநாயக்தின் தூண்கள்  மக்களுக்கான மக்களின் உரிமைகளைக் பாதுகாக்கும் தூண்களாக, மக்களின் பிரச்சினைகளை முன்நிறுத்தி அவற்றிற்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நிறுவனங்களாக இருக்க வேண்டுமென்பதே மக்களின் அபிலாஷையாகும். இந்நாடடில் நீதித்துறையைத் தவிர ஜனநாயகத்தின் தூண்காகக் கருத்தப்படுகின்ற ஏனைய மூன்று துறைசார் நிறுவனங்கள் மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும், பிரச்சினைகளையும் நிறைவேற்றி வைப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பது தற்கால சூழலில் இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் புலப்படுத்துகின்றன. 

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் ஜனநாயத்தின் நான்கு தூண்களினதும் செயற்பாடுகள் சுயாதீனத்தன்மையுடன் இடம்பெற வேண்டும் என்பதே யதார்த்தமாகும். இந்த யதார்த்தை நிலைபேறாக்குவதற்கு மக்களுக்கான ஆட்சி ஆரோக்கியமாக இடம்பெற வேண்டியுள்ளது.

ஜனநாயகத்தின் வெற்றி

கடந்த 22 நாட்களாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினால் அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் வினைத்திறன் இழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுவதோடு ஆரோக்கியமன்ற தன்மையையும் உருவாக்கியிப்பதை பல அமைச்சுக்களுக்கும், நிறுவனங்களுக்கும் விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உணர முடிகிறது.

ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள இந்த இழுபறி நிiலைக்கு விரைவில் தீர்வு ஏற்பட்டு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள ஜனநாயகம் பாதுகாக்;கபட வேண்டும். அத்துடன், எந்த அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டாலும் மக்களின் அபிலாஷைகளும் எதிர்பார்;ப்புக்களும் நிறைவேற்றப்படுவதற்கான ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்கள் இடம்பெற வேண்டியது ஜனநாயகத் தேசத்தை ஆளும் ஆட்சியாளர்களின் பொறுப்பின் அவசியமாகும்.

ஏனெனில், 2015ல் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சிக்குச் கைகோர்த்த வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட்ட இந்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் மனங்களை வெற்றிகொள்ளும் வகையில் சிறுபான்மை சமூகத்தின் நீண்டகாலத் தேவைகள் இந்நல்லாட்சியில்  நிறைவேறும். இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் அதனூடாக சகல மக்களினதும் உரிமைகள் மதிக்கப்பட்டு நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழும் சூழல் ஏற்படும், பேரினவாத கடும்போக்காளர்களின் வெறுப்புப் பேச்சுகளும். அவர்களின் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். சட்டமும் நீதியும் சகலருக்கு சமம் என்ற தத்துவத்துக்கு  நல்லாட்சியில் மதிப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கைகள கடந்த மூன்றறை வருடத்தில் நிiவேற்றப்படவில்லை.

இந்நிலையில்,;நல்லாட்சியின் இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையிலான அதிகார முரண்பாட்டின் அதிர்வுகள்; இற்றைக்கு மூன்றை வருடங்களுக்கு முன்னர் இந்த நல்லாட்சியின் மீது சிறுபான்மை சமூகங்கள் வைத்திருந்த நம்பிக்கையையும்; எதிர்பார்ப்பையும்; தோல்;விகளை நோக்கி நகரச் செய்வதாகவே சிறுபான்மை சமூகங்களினால் உணரப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில்தான கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி; ஏற்படுத்தப்பட்ட திடீர் ஆட்சி மாற்றம் பின்னா தொடரும் அரசியல நெருக்கடியினால்   நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. தோல்வி கண்டிருக்கிறது. அரசியல் பிரலயத்தினால் தோல்வி கண்டுள்ள ஜனநாயம் வெற்றி பெற வேண்டுமாயின்;, சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள ஜனநாயகத்தின் தூண்களும், கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள ஜனநாயகத்தின் பண்புகளும் பாதுகாக்கப்பட்டு இந்நாட்டில் சுபிட்சமானதொரு  சூழல்  மலர வேண்டுமென்பதே ஜனநாயகத்தை நேசிக்கின்றவர்களின் பிரார்த்தனையாகவுள்ளது.

 -எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment