நாமலுக்கு எதிரான வழக்கு 2019 ஏப்ரல் வரை ஒத்தி வைப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 30 November 2018

நாமலுக்கு எதிரான வழக்கு 2019 ஏப்ரல் வரை ஒத்தி வைப்பு!


நாமல் ராஜபக்ச மற்றும் ஐவருக்கு எதிரான 30 மில்லியன் நிதி மோசடி தொடர்பிலான வழக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் குறித்த வழக்கில் ஆஜராக வேண்டிய சிரேஷ்ட வழக்கறிஞர்கள் வேறு வழக்கில் ஆஜராகியுள்ளதால் அவர்களுக்கான அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்க வழக்கை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் 03ம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் ஏலவே பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கொன்றும் அடுத்த வருடம் மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் அண்மையில் மஹிந்த குடும்பத்தின் மோசடிகளை துரிதமாக விசாரிக்கவென ஆரம்பிக்கப்பட்டிருந்த விசேட உயர் நீதிமன்றங்கள் தற்சமயம் கேள்விக்குறியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment