14ம் திகதி அமர்வில் வேறு எதுவும் நடக்காது: யாப்பா - sonakar.com

Post Top Ad

Thursday, 8 November 2018

14ம் திகதி அமர்வில் வேறு எதுவும் நடக்காது: யாப்பா


14ம் திகதி நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதியின் உரையைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லையென்கிறார் லக்ஷமன் யாப்பா.


மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் பேரம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான கால அவகாசத்தைப் பெறும் நோக்கிலேயே ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதும் அன்றைய தினம் ஜனாதிபதியின் உரையைத் தவிர வேறு எதுவும் இடம்பெறப் போவதில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment