122 பேரையும் அழைத்து வரத் தயார்: UNP சவால் - மைத்ரி மாற்று யோசனை! - sonakar.com

Post Top Ad

Thursday 15 November 2018

122 பேரையும் அழைத்து வரத் தயார்: UNP சவால் - மைத்ரி மாற்று யோசனை!


நாடாளுமன்றில் நேற்றைய தினம் மஹிந்தவின் பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்தை நிராகரித்து நம்பிக்கையில்லா பிரேரணையில் 122 பேர் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சந்தேகத்துக்குரியது என மஹிந்த தரப்பு தெரிவித்து வரும் நிலையில் குறித்த 122 பேரையும் நேரடியாக அழைத்து வந்து ஜனாதிபதியை சந்திக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி சவால் விடுத்துள்ளது.



இந்நிலையில், இது தொடர்பில் ஜனாதிபதியைத் தொடர்பு கொண்டதாகவும் இதன் போது 122 பேரையும் அழைத்து வரத் தேவையில்லை மாறாக அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர்களை மாத்திரம் இன்று மாலை 5 மணியளவில் அழைத்து வருமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்றை ஜனாதிபதி கோரியிருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை வேளையில் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த தலைவர்களுடன் சந்திப்பொன்று நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment