
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவர் எந்த அடிப்படையில் பிரதமர் பதவி வகிக்கிறார் என மேன்முறையீட்டு நீதிமன்றிடம் விளக்கம் கேட்டு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவை மைத்ரிபால சிறிசேன பிரதமராக நியமித்த போதிலும் நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில் ஆகக்குறைந்தது இரு தடவைகள் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இன்றைய தினமும் சபாநாயகரின் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் 121 உறுப்பினர்களின் வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்தும் மஹிந்த பிரதமர் என சொல்லித்திரிவதன் அடிப்படையை சவாலுக்குட்படுத்தி இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment