LTTEயினருக்கு சம்பளம் கொடுத்த மஹிந்த-கோத்தா: சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Thursday 25 October 2018

LTTEயினருக்கு சம்பளம் கொடுத்த மஹிந்த-கோத்தா: சம்பிக்க!


2005 ஜனாதிபதி தேர்தலில் வட-கிழக்கில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் பங்கெடுப்பதைத் தடுக்க விடுதலைப் புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ச தரப்பு பணம் கொடுத்ததாக நீண்டகாலமாக 'ஊகம்' நிலவுகின்ற நிலையில், ராம் - நகுலன் மற்றும் கே.பி போன்றோருக்கு அக்கால கட்டத்திலேயே கோத்தா மாதாந்தம் கொடுப்பனவு வழங்கியதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


இது தொடர்பில் தான் மஹிந்த ராஜபக்சவிடம் தான் விசாரித்த போது கிழக்கில் தனக்கு வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடியவர்கள் அவர்கள் எனவும் அதில் தவறில்லையெனவும் மஹிந்த விளக்கமளித்ததாகவும் சம்பிக்க மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகள் மூலம் மக்களைக் கொன்றழித்தவர்களுக்கு மஹிந்த ராஜபக்ச மறு புறுத்தில் மாதாந்த கொடுப்பனவு வழங்கியிருந்ததாகவும் முடிந்தால் இதனை மறுக்கட்டும் எனவும் அவர் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment