குமார வெல்கம உண்மையைத் தான் பேசுவார்: துமிந்த ஆதரவுக் குரல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 October 2018

குமார வெல்கம உண்மையைத் தான் பேசுவார்: துமிந்த ஆதரவுக் குரல்!


கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதை பகிரங்கமாக எதிர்த்து வரும் கூட்டு எதிர்க்கட்சியின் குமார வெல்கம, எப்போதும் தன்னைப் போன்று உண்மையைப் பேசும் நபர் எனவும் அவரால் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பியுள்ளார் துமிந்த திசாநாயக்க.


யாழ் நூலகத்தை எரித்ததில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான காமினி லொக்குகேவுக்கு தொடர்பிருப்பதாக அண்மையில் குமார வெல்கம தெரிவித்திருந்ததன் பின்னணியிலேயே துமிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு பாரதூரமானது எனவும் அதனை விசாரித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் துமிந்த மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment