5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை 'இனி' கட்டாயமில்லை! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 October 2018

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை 'இனி' கட்டாயமில்லை!


5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை இனி கட்டாயமில்லையென தீர்மானித்துள்ளார் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்.இதற்கமைய, 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையைக் கட்டாயமாக்கி வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபத்தை இரத்துச் செய்ய உத்தரவிட்டுள்ள அவர், குறித்த பரீட்சை மாணவர்க்கு மேலதிக அழுத்தமாக மாறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மீளாயவென நயமிக்கப்பட்டிருந்த குழுவின் பரிந்துரைக்கமையவே தான் இவ்வாறு தீர்மானித்துள்ளதாக அகில மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment