பெரும்பான்மை கிடைத்து விட்டது: JO வின் கணக்கு! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 October 2018

பெரும்பான்மை கிடைத்து விட்டது: JO வின் கணக்கு!

Image result for mahinda maithri

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்துராலியே ரத்ன தேரர்,ராதாகிருஷணன் மற்றும் அரவிந் குமாரும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை நல்கியுள்ள நிலையில் மஹிந்த ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 101ஐ தொட்டுள்ளதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.

இந்நிலையில், ஜே.வி.பியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் இதனடிப்படையில் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்ற பெரும்பான்மையையும் நிரூபிக்க முடியும் எனவும் கூட்டு எதிர்க்கட்சி தரப்பு தெரிவிக்கிறது.


நேற்றிரவு தமக்கே பெரும்பான்மையுள்ளதாக ரணில் தெரிவித்திருந்த நிலையில் நாடாளுமன்றம் கூடுவதற்கு இரு வாரங்கள் தடை விதித்துள்ளார் ஜனாதிபதி. இந்நிலையில், இடைப்பட்ட காலத்தில் பேரம் பேசுதல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment