திகன வன்முறை பற்றிய அறிக்கை தயார்: HRC - sonakar.com

Post Top Ad

Saturday, 20 October 2018

திகன வன்முறை பற்றிய அறிக்கை தயார்: HRCஇவ்வருடம் மார்ச் மாதத்தில் திகன மற்றும் சுற்றுவட்டாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட வன்முறைகள் தொடர்பில் தமது அறிக்கை தயாராகி விட்டதாக தெரிவிக்கிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

மே மாதம் முதல் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இவ்வறிக்கை தயாராகியுள்ளதாகவும் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளான அமித் குழுவினர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் பொலிசார் காலத்துக்கு காலம் மாறி 'கொந்தராத்து' வேலை செய்வதாக அமித் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment