இலங்கை நிறுவனங்களும் இனி Ebayயில் விற்பனை செய்யலாம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 October 2018

இலங்கை நிறுவனங்களும் இனி Ebayயில் விற்பனை செய்யலாம்


இலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் நிறுவனங்களும் இனி பிரபல இணைய வர்த்தக மையமாக ஈ-பேயூடாக தமது உற்பத்திகளை விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளது நிதியமைச்சு.


தனி பொருள் ஒன்றின் பெறுமதி 3000 அமெரிக்க டொலருக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பதோடு மாதாந்தம் தமது ஏற்றுமதியை அறிவிக்கும் வகையில் CUSDEC படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தற்சமயம் பயனடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment