நாமல் குமாரவிடம் பேசியது நாலக டி சில்வா தான்: ஆய்வில் உறுதி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 October 2018

நாமல் குமாரவிடம் பேசியது நாலக டி சில்வா தான்: ஆய்வில் உறுதி!பொலிஸ் உளவாளி நாமல் குமாரவிடம் மைத்ரி - கோத்தா கொலைத் திட்டம் பற்றி உரையாடியது முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வா தான் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் இருவரிடமிருந்தும் பெறப்பட்ட ஒலிப்பதிவுகளை ஆய்வு செய்து குறித்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.இடை நிறுத்தப்பட்டுள்ள நாலக டி சில்வாவிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment