நல்லாட்சியை ரணில் நாசமாக்கி விட்டார்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 October 2018

நல்லாட்சியை ரணில் நாசமாக்கி விட்டார்: மைத்ரி!


இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்கவே மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


2015ல் 62 லட்சம் வாக்குகளை வழங்கி மக்கள் தன்னை ஜனாதிபதியாக்கியதன் பின்னணிய்ல் தன் மீதுள்ள நம்பிக்கையையும் பொறுப்புகளையும் உணர்ந்து தான் செயற்படுவதாகவும் எதிர்காலத்திலும் அவ்வாறே தான் இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்ற அவர், தகுந்த நேரத்தில் தான் தீர்க்கமான முடிவொன்றை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக மக்கள் ஆணைக்குப் புறம்பாக நடந்து கொண்டதுடன் மத்திய வங்கி ஊழல், பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்ததாகவும் நல்லாட்சியை ரணில் நாசமாக்கி விட்டதாகவும் மைத்ரி மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment