மலையக மக்களுக்காக யாழில் அறவழிப் போராட்டம் - sonakar.com

Post Top Ad

Sunday, 21 October 2018

மலையக மக்களுக்காக யாழில் அறவழிப் போராட்டம்


மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி 'உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளருடன் நாமும் கைகோர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (21) காலை 9.30 மணிக்கு யாழ் பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற இப்போராடட்டத்தில் தோட்டத் தொழிலாளருக்காய் வடக்கில் இருந்து உரிமைக் குரல் கொடுக்கும்  பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


சமூக வலைத்தள நண்பர்களின் ஏற்பாட்டில் “தோட்டத் தொழிலாளருக்காய் வடக்கி இருந்து ஓர் உரிமை குரல்” என்ற தொனிப் பொருளின் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும், தோட்ட கம்பனிகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை 
எழுப்பியிருந்தனர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment